‘ஜெயிலர் 2’ அனிருத் கொடுத்த அப்டேட் ?

‘ஜெயிலர் 2’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீட்டு பணிகளும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் நேற்று தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ‘ஜெயிலர் 2’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது. அதன்படி, இப்படம் வரும் அக்டோபர் 15ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் ஜெயிலர் 2 படத்தின் மற்றொரு அப்டேட்டை கொடுத்துள்ளார். அதன்படி, ‘ஜெய்லர் 2’ படத்தின் டீசரில் இடம்பெற்றிருந்த ஒன் நேம் (One Name) என்ற ஆடியோ ட்ராக் இன்று மாலை வெளியாகும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *