ஜனநாயகன் வெளியீட்டுக்கு பச்சை சிக்னல்

புதிய தகவலின்படி ஜனநாயகன் படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படம் வெளியீட்டுக்கான பாதை தற்போது திறக்கப்பட்டுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் பணியில் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அனைத்தும் திட்டமிட்டபடி சென்றால், இந்த மாத இறுதிக்குள் படம் திரையரங்குகளில் வெளியாகும் வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார்.மேலும், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, மாமிதா பைஜு மற்றும் நரேன் போன்ற நடிகர்களும் நடித்துள்ளனர்.

விஜயின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக கருதப்படும் இந்தப் படம், அவரது ரசிகர்களுக்கு ஒரு திரைப்பட அனுபவத்தை விட அதிகமான உணர்வுப்பூர்வ நிகழ்வாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *